2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞன் அடித்துக்கொலை

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வடமராட்சி பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞனே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், வீட்டுக்கு சற்று தொலைவில் நேற்று (13) இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் அதில் உரையாடிக்கொண்டு சென்ற போது சற்று தூரத்தில் நின்ற இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X