Editorial / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜித்தா, என்.ராஜ்
யாழ்.- கொழும்புத்துறை பகுதியில், இன்று மாலை 4 மணியளவில், கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது 25) எனும் இளைஞனே, இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞன் அவ்வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இளைஞனை வழிமறித்து வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பழைய பகையை தீர்க்கும் முகமாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago