2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘இளைஞர்களும் சமூக பொறுப்புக்களும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இளைஞர்களும் சமூக பொறுப்புக்களும்” எனும் தொனிப்பொருளில், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்றிட்டம் – 2019 என்ற தலைப்பின் கீழ் செயற்றிட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தின் மூலமாக, யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி செயன்முறையில் இளைஞர்களை துடிப்புடன் பங்குபற்ற  செய்யும் நோக்கில், வட மாகாணத்தில்  யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 120 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் சமூக வெற்றியாளர்களாக (Community Champions) பயிற்சி பெற்றிருந்தனர்.

இரண்டு நாள்களாக இடம்பெற்ற  இப்பயிற்சியினூடாக, குறித்த இளைஞர்களுக்கு சமூக பிரச்சினைகள், சமூக பன்முகத்தன்மை, சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகள், தேவை பகுப்பாய்வு நுட்பங்கள், பிரச்சினைகளைத் தீர்க்கும் அல்லது கையாளும் முறைகள், மனித உரிமைகள், உரிமை அடிப்படையிலான அணுகுமுறைகள், தகவல்  அறியும் உரிமைச் சட்டம், திட்ட முன்மொழிவு எழுதுதல் போன்ற தலைப்புகளின் கீழ் சிறந்த வளவாளர்களால் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

அத்துடன் எதிர்வரும் 6 மாத காலப்பகுதியில், குறித்த இளைஞர்கள், குழுக்களாக செயற்பட்டு சமூக பிரச்சினைகளை அடையாளஹ்கண்டு, நடைமுறை தீர்வுகளூடாக திட்டமொன்றை உருவாக்கி, அதனை சமூக மக்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவார்கள். பின்னர் இறுதியில் திட்ட செயற்பாடு தொடர்பான ஓர் அறிக்கையையும் கையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான வழிகாட்டல்கள், ஏனைய உதவிகளை SDJF மற்றும் FRC நிறுவனங்கள் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

'எனக்கு எப்போதும் சமூக சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அதை எவ்வாறு முறையாக செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இப்பயிற்சி என்னை முறையாக கற்றுக்கொள்ள வழிவகுத்தது மட்டுமல்லாமல் எனது ஆர்வத்தையும் தூண்டியது. மேலும் சமூகத்துக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பையும் அளித்தது' என மன்னாரைச் சேர்ந்த பயிற்சி பெற்ற எஸ். அமிர்தநாயகி என்பர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு பயிற்சி பெற்ற இளைஞன் எம். கேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், 'இப் பயிற்சியானது முறையாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எம்மை வலுப்படுத்தியது, இதன் மூலம் எமது தனிப்பட்ட மேம்பாடு மாத்திரமின்றி சமூகத்தின் நலனுக்கான சாதகமான மற்றும் நிலைத்து பயனளிக்கும் செயற்பாடுகளை செயற்படுத்த முடியும் என நம்புகின்றேன்' எனத் தெரிவித்தார்.

இச் செயற்றிட்டமானது சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற UNSCR 2250 கொள்கையை, இலங்கையில் ஊக்குவிக்கும் வகையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ((SDJF)) உருவாக்கியது.

இச் செயற்றிட்டமானது 'வட மாகாணத்தில் மன வடுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு சேவைகள்' என்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் (FRC) செயற்பாட்டு உதவியுடனும் நடைபெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X