2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கல்வியங்காடு பகுதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்ற சம்பவம், திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள புலவனார் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர், திங்கட்கிழமை (09) இரவு அவ்வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் அடங்கிய குழு, இளைஞரை வழி மறித்துத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர், விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை, தாக்குதலாளிகள் குறித்த இளைஞனைத் துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X