2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும்

Gavitha   / 2016 நவம்பர் 27 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த வாள்வெட்டுக்கு இலக்கான மேற்படி நபர், இதுவரை பேசமுடியாத நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றனர்.

021-2255160 என்ற நிலையத் தொலைபேசி இலக்கம் ஊடாகவும், அல்லது 0777811168 என்ற அலைபேசி ஊடாகவும் அறியத்தருமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X