2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் சாரதியை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியை தாக்கிய தனியார் பஸ் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (20) கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்தில் வைத்து இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் கோண்டாவில் சாலையில் பணியாற்றும் சாரதி காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனியார் பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் அவரை சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X