2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இ.போ.ச பஸ் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2016 மே 12 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். கர்ணன்

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பஸ் மீது, நேற்று புதன்கிழமை (11) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம், நேற்று அதிகாலை 05 மணியளவில், அச்சுவேலி - தம்பாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், மென்பானப் போத்தலினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இதனால், பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X