Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் மூலம், நம் நாட்டுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள், நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு, அபிவிருத்திக்குப் பங்காற்றும் வழிகள், அவை சூழலுக்குப் பாதிப்பினை உருவாக்கும் தன்மைகள் போன்ற விடயங்கள் தொடர்பில், பொது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்' என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை அவர், சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் முன்வைத்தார்.
இதன்போது அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
'சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இவ்வருட இறுதிக்குள் வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவாக எந்தவொரு நாடும், அபிவிருத்தி அடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும்போது, அது தொடர்பில் அறிவார்ந்த மதிப்பீடொன்றை மேற்கொள்வதுடன், அது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தகவலறியும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எமது நாட்டு மக்கள், இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளக்கூடாது என்ற விதிமுறைகள் ஏதும் இருக்கின்றனவா?' என்று அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
'இவ்வாறான உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் பல்வேறு முரணான கருத்துக்களே நிலவுகின்றன. எனவே, இத்தகைய உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் ஏதேனும் நட்டமேற்பட்டால், அந்த நட்டத்தை ஈடு செய்ய வேண்டியவர்கள் எமது மக்களே' என்று அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago