2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

உடும்பு பிடித்தவருக்குப் பிணை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

காரைநகர், கசூரினா கடற்கரையில் உடும்பு பிடித்த நபரொருவரை, 50,000 ரூபாய் ஆட்பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று திங்கட்கிழமை (21) அனுமதியளித்தார்.

நண்பர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கசூரினாவுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞனொருவர், அங்கு திரிந்த உடும்புப் பிடித்து வைத்துள்ளார். 

இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த பொலிஸார், இளைஞனைக் கைது செய்ததுடன், உடும்பையும் மீட்டனர்.

இளைஞன், ஊர்காவற்றுறை பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே மேற்படி அனுமதியளித்ததுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் உடும்பை காட்டுக்குள் விடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X