2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவரது வீட்டின் மீது, ஞாயிற்றுக்கிழமை (11) இரவு 10 மணியளவில், இனந்தெரியாத நபர்களினால், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதியின் மூர்த்த விநாயகர் ஆலயப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டின் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மீது, முதலில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர், 3 மதுபானப் போத்தல்களை வீசியெறுந்தம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தினால், வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இது தொடர்பில் யாழ்;பாணம் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் நியமனப் பிரச்சினையில், மேற்படி ஆசிரியர், பழைய அதிபரை நீக்கி புதிய அதிபரைக் கொண்டு வருவதற்கு ஊக்கமாகச் செயற்பட்டார் என்பதுடன், பழைய அதிபரைக் நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த, அவ்வாசிரியர் முயன்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X