2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் அறிமுகம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை, வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ், இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

உணவு இறக்குமதிக்கென செலவாகும் வெளிநாட்டு செலவாணியை நாட்டினுள் சேமித்துக் கொள்ளும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தில், வட மாகாணத்தில் எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியும், விவசாய உற்பத்தியில் இரசாயனப் பயன்பாடுகளைத் தவிர்த்து இயற்கை பசளைகளை பயன்படுத்துதல், வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட விடயங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில், விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், ஐந்து மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், மத்திய, மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X