2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 12 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை (10) வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (11) தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நேரில் சென்று கலந்துரையாடி தனது ஆதரவையும் தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த கோரிக்கையை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடைமுறைப்படுத்த ஆவண செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து குறித்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நேற்று (11) மாலையுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X