2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உமி மூட்டைகளுக்குள் முதிரை மரக்குற்றிகளைக் கடத்தியவர்கள் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

லொறியொன்றினுள் உமி மூடைகளுக்குள் முதிரை மரக்குற்றிகளை மறைத்துக் கொண்டு சென்ற இருவரை, உடுவில் பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இந்த லொறியை வீதிக்கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மறித்துச் சோதனை செய்தனர். 

இதன்போது, தாங்கள் நெல் மூடைகளைக் கொண்டு செல்வதாக லொறியில் பயணித்த இருவரும் கூறியுள்ளனர்.

மூடைகளை பொலிஸார் குற்றிப் பார்த்த போது அதற்குள் உமி மாத்திரமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட பொலிஸார், மூடைகளை அகற்றிப் பார்த்த போது, உள்ளே முதிரை மரக்குற்றிகள் இருந்தமை தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த பொலிஸார், கடத்தப்பட்ட 38 முதிரை மரக்குற்றிகளையும் பறிமுதல் செய்தனர். அவை சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனப் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X