2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவேந்தல்

Sudharshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உன்னதமான ஊடக சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் பொதுநினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராமனின் 11ஆவது ஆண்டு நினைவு நாளும் நாளை வெள்ளிக்கிழமை (29) நடைபெறவுள்ளது.

மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நினைவு உரைகளும் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களது குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள், வீடமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் விடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X