2025 மே 14, புதன்கிழமை

‘உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“நாம் ஒரே இனம் ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால், எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

அத்துடன், “அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே மாற்றுத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .