2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உரிமைகள் தந்தால் மாத்திரமே இலங்கையர் ஆவோம்

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தமிழர்களுக்கு உரிமைகளைத் தந்தால் தமிழர்கள் இலங்கையர்களாக மாறுவார்கள். தரமறுத்தால் தமிழர்களாக மாத்திரம் இருப்பார்கள் என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பரிந்துரைகளை கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல தமிழர்கள் அனைவரும் தமிழீழத்தை விரும்புகின்றனர். அது அவர்களின் ஆழமான விருப்பமாகவும் இருக்கின்றது. தற்போதய யதார்த்தத்தில் இது சாத்தியமில்லை. குறைந்த பட்சம் அதிஉச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்ட சமஷ்டி ஆட்சியை தீர்வாக அடைய எதிர்பார்க்கின்றோம்.

அதிஉச்ச சமஷ்டி என்கின்ற போது, 7 பிராந்தியங்களாக இருக்கும். வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு பிராந்தியமும் மலைய மக்களுக்கு ஒரு பிராந்தியமும் 4 அல்லது 5 பிராந்தியங்கள் பெருன்பான்மையின மக்களுக்கும் இருக்கும். பெரும்பான்மையினத்தவர்களை நாங்கள் சகோதரர்களாக எண்ணுகின்றோம். அவர்களைப் போல எங்களுக்கான உரிமைகளையும் வழங்குங்கள்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சிங்களத்துக்கு நிகராக தமிழுக்கும் அந்தஸ்து வழங்க வேண்டும்.

எங்களுக்காக உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடமும் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியும் வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X