2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உர மானியத்;துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கான உர மானியத்;துக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லi என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

'கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு 6071 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள நெற் செய்கைக்கும் 5316 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றுப்பயிர் செய்கைக்குமான உர மானிய கொடுப்பனவுகள், கடந்த 5ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும்' என்று மாவட்டச் செயலகத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அது வழங்கப்டவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் தவிர்ந்த சின்னப்பல்லவராயன்கட்டு, கல்மடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்பு குளம், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான்குளம், குஞ்சுக்குளம், பாலங்குளம் ஆனைவிழுந்தான் குளம், புதுஐயன்குளம், கந்தன்குளம், கனகாம்;பிகைக்குளம் ஆகிய 12 குளங்களின் கீழ், 6071 ஏக்கர் நிலப்;பரப்பில் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

மேற்படி செய்கைகளுக்கான உரத்துக்கான மானியக் கொடுப்பனவுகள் வழங்கப்;படவேண்டிய தேவையுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X