2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உறவினர்களுக்கிடையே தகராறு; சிறுமி மீது கத்திக்குத்து

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

சாவகச்சேரி பகுதியில், நேற்று (14) மாலை, உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், 12 வயது சிறுமியொருவர், கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

நாவற்குழி - 300 வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த துவாரகா (வயது 12) என்ற சிறுமியே, இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.

அந்த வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்று (14) நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களுக்கு இடையில் திடீரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த வாய்த்தர்க்கம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, நபரொருவர், பிறிதொருவரை கத்தியால் குத்துவதற்கு முற்பட்ட வேளையில், அருகிலிருந்த சிறுமி ஒருவரின் கழுத்தின் மீது தவறுதலாக கத்தி குத்தியுள்ளது.

இதில் காயமடைந்த சிறுமி, உறவினர்களால் மீட்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X