2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களிடம் இருந்து தப்பியோடினார் குருகுலராஜா

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா விரைந்து சென்ற சம்பவம் ஒன்று, இன்று (20) இடம்பெற்றது.

மதத்தலைவர்களின் பேச்சை அடுத்து ஏற்பட்ட சமரசத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை, எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில், இன்று (20) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் நிறைவில், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்ப முற்பட்டவேளை, அவர் பதிலளிக்காது அவ்விடத்திலிருந்து வேகமாக சென்றார்.

கடந்த 14ஆம் திகதி வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாயஅமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும், எனவே அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கினார்.

எனினும், கல்வியமைச்சர் த.குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X