Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மார்ச் 29 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் மோட்டார் சைக்கிள் கடன் தொகைக்கான நிபந்தனை மேலும் தளர்த்தப்படும்' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' எனும் தொனிப் பொருளில் ஊடகவியலாளர் குழுவுடன் யாழுக்கு வருகை தந்த ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறினார்.
இதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு வங்கிகள் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கான கடன் தொகையின் மீள் செலுத்தும் தொகை, அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு வங்கிக்கு செலுத்தும் முறை மாற்றப்பட்டு, தவணை முறையில் பணம் செலுத்தும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்;தக் கடனை பெற்றுக்கொள்ள பிணையாளர் எவரும் அவசியமில்லை என்றும் சம்பளம் பெறும் முறை மட்டுமே தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொடுத்தது முதல் ஊடகவியலாளரே அதன் உரிமையாளர்' எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
24 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago