2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

எங்களை தூக்கிலிடுங்கள்: இல்லையேல் உண்ணோம்

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

'நிரபராதிகளான நாங்கள், எந்தவித முன்னேற்றகரமான விசாரணைகளுமின்றி, எட்டு மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய வழக்குகளை துரிதமாக விசாரியுங்கள். குற்றவாளிகள் என்றால் தூக்கிலிடுங்கள். வழக்கைத் தாமதப்படுத்தினால், சாகும்வரையில் நாங்கள் உண்ணாவிரதமிருப்போம்' என புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் திங்கட்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;டது. சந்தேகநபர்கள் கருத்துக்கூற சந்தர்ப்பம் அளிக்கப்பட்ட போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

'வழக்கின் எந்த அறிக்கையும் இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு, நிரபராதிகளான எங்களை தடுத்து வைத்துள்ளனர். எங்களுக்கு மனைவி, பிள்ளைகள் உண்டு. அவ்வாறு இருக்க நாங்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டோம். எங்கள் குடும்பத்தை கண்காணிப்பதற்கு எவருமில்லை. இதனால் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம்' எனச் சந்தேகநபர்கள் கூறினர்.

சட்டத்தரணியொருவரை நியமித்து வழக்கை நடத்தலாம் என நீதவான் கேட்டபோது, தங்களுக்கு உண்பதற்குக்கூட வழியில்லாத நிலையில் எவ்வாறு சட்டத்தரணியை நியமிக்க முடியும் என சந்தேகநபர்கள் கூறினர்.

விசாரணைகள் சரியான ரீதியில் முன்னெடுக்கப்படும் என நீதவான் கூறியதுடன், வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார்.

இதேவேளை, வித்தியாவுக்கான சமய ரீதியிலான இறுதிக் கிரியைகளை நடத்த வேண்டியுள்ளதாகவும் அதற்கு சடலம், சமய அனுஷ்டனாங்களுக்கமைய எரிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் வழக்கை துரிதமாக நடத்தி தீர்ப்பு வழங்குமாறு வித்தியாவின் தாயார், சட்டத்தரணியு}டாக நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X