2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

எட்டு மாதங்களில் 19 பேர் உயிரிழப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரி சங்கத்தினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அரச வைத்திய அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இதுவரையில் இடம்பெற்ற விபத்துக்களில் 896 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், கடந்த சில மாதங்களாவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்த 3 ஆயிரத்து 204 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 64 பேர் உயிரிழந்திருந்தினர்.

விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் அநேகமானவர்கள் 30 வயதுக்கு குறைந்தவர்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X