2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்’

Editorial   / 2017 ஜூன் 30 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

'மக்கள் எதிர்பார்க்கின்ற பெரிய அளவிலான திட்டங்களை, முழுமையாக செயற்படுத்துவதற்கு உரிய அளவு நிதி, பெண்கள் விவகார அமைச்சில் இல்லை. எனினும், மக்களுடைய எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்' என்று, வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.  

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரனும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய கல்வி அமைச்சின் பொறுப்புகள் சர்வேஸ்வரனுக்கும் பெண்கள் விவகாரம், அனந்தி சசிதரனுக்கும் பகிந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் சத்தியப்பிரமான நிகழ்வு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'பதவியேற்ற சிறு நேரத்திலேயே எனக்குப் பல அழைப்புக்கள் வந்தன. அமைச்சுப் பதவிகளை ஏற்ற எம்மிடம் இருந்து, மக்கள் பெரியளவில் எதிர்பார்க்கின்றனர். எனினும், எதிர்பார்ப்பை முழுமையான முறையில் பூர்த்தி செய்யும் அளவுக்கு அமைச்சிடம் நிதி இல்லை. எனினும், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X