Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
புதிப்பிக்கத்தகு மின்வழங்கல் எனும் தொனிப்பொருளில் ஆசியாவிலேயே முதன்முதலாக, எழுவைதீவில் காற்றலை மின்கலம், சூரியகலம் ஆகியவற்றின் கூட்டிணைந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் உயர் பொறியியல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மின்சாரசபை ஊடாக 110 மில்லியன் ரூபாயை இத்திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான முதற்கட்டப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
உடைந்து காணப்பட்ட எழுவைதீவு இறங்குதுறை, மின்சார சபை அதிகாரிகளால் கடந்த வாரம் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டது.
மின் உற்பத்தி நிலையத்தின் ஆரம்ப வேலைப்பாடுகள் மின் பொறியியலாளர்களால் தொடங்கப்பட்டதையடுத்து, கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகள், தீவுக்கு எடுத்து செல்லும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டுக்கு கடற்படையினரின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்டபட்ட எழுவைதீவில், 339 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆரம்பகாலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டுக்கு பின்னர் இத்தீவுக்கான மின்சாரம் 24 மணித்தியாலங்களாக வழங்கப்பட்டு, தற்போது வரை டீசல் இன்ஜீன் மூலம் மின் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவில் பற்றாக்குறை காணப்படுவதுடன், 1ஃ3 குடும்பங்களுக்கு மின் கிடைக்கபெற்றிருக்கவில்லை.
இப்புதிய திட்டத்தினூடாக 60 கிலோ வாட் மின்சாரம் இம் மின் உற்பத்தி நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும். மேலும் இங்குள்ளவர்களில் 180 குடும்பங்கள் இதனூடாக பயண்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீள் கழிவுகள் இல்லாத பசுமையான செயற்றிட்டத்தினால், சூழல் மாசடைவது தவிர்க்கப்படுவதுடன், இத்திட்டம் ஏனைய தீவுகளிலும் மேற்கொள்ளப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago