Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
நவாலி வீதி, ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த குடும்பஸ்தர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏழு பிள்ளைகளின் தந்தையான தேவகுமார் தேவதாஸ் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
திங்கட்கிழமை (31) இரவு, நித்திரைக்கு சென்ற அவரை அதிகாலை, மனைவி எழுப்பிய போது எந்தவித அசைவும் இன்றி உடல் இருந்துள்ளது. கணவன் அலுப்பு காரணமாகத் தூங்குவதாக நினைத்து காலை 6 மணியளவில் மீண்டும் எழுப்பியுள்ளார். இதன்போது, உடல் குளிர்ந்த நிலையில் அசைவற்று இருந்துள்ளது.
உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.
மரண விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் போது மேற்படி நபருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியே இறப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணையின் பின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago