2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஏ-9 வீதியின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் கோட்டை வரையில் உள்ள ஏ-9 வீதியை ஊர்காவற்றுறை கோட்டை வரையில் அதிகரித்து, வீதிக்கான அபிவிருத்திகள் செய்யப்படவேண்டும் என பேராசிரியர் இரா.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

வேலணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேயர் காலத்தில், ஏ-9 வீதியென்பது ஊர்காவற்றுறை கோட்டையிலிருந்து கண்டி வரையிலும் காணப்பட்டது. அதேபோல் மீண்டும் அதனைக் கொண்டு வரவேண்டும்.

பண்ணைப் பாலத்துடன் கூடிய தீவகத்துக்கான வீதியானது தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியை ஏ-9 வீதியுடன் இணைத்து அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வது சிறந்தது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X