2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவையும் மீறி செல்லும் டிப்பர்களால் வீதிகள் சேதம்

Niroshini   / 2016 மே 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, முக்கொம்பன் கிராம வீதி வழியாக தொடர்ச்சியாக மணல் டிப்பர்கள் பயணிப்பதன் காரணமாக கிராமத்தின் வீதி சேதமடைந்து வருவதாக முக்கொம்பன் கிராம அபிவிருத்திச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த இருமாதங்களுக்கு முன்னர் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கொம்பன் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் தமது கிராமம் ஊடாக நாள்தோறும் மணல் டிப்பர்கள் செல்வதாகவும் இதன்காரணமாக கிராமத்தின் வீதி பாதிக்கப்படுவதுடன், முக்கொம்பனிலிருந்து பூநகரி 10ஆம் கட்டை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய கொங்கிறீட் வீதி சேதமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மணல் டிப்பர்கள் எங்கிருந்து வருகின்றதென கூட்டத்தின் இணைத்தலைமைகள் கேட்டபோது, துணுக்காய் அம்பலப்பெருமாள்குளத்திலிருந்து மணல் டிப்பர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டம் வழியாக மணலினைக் கொண்டுசெல்லமுடியாது. ஏ-9 வீதியினை பயன்படுத்துங்கள் என இணைத்தலைமைகளால்  தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த இருமாதங்களாகவும் டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுவதாக கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X