2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒரே தினத்தில் இரு பரீட்சைகள்

Sudharshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சையும் இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும் ஒரே தினத்தில் நடைபெறுவதால் பரீட்சாத்திகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சை எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கு 23 வயதுக்குட்பட்டவர்களே தோற்ற முடியும். இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சையிலும் அவ்வாறான வயது எல்லையில் இருப்பவர்களே தோற்றுகின்றனர். இதனால் எந்தப் பரீட்சையில் என பரீட்சாத்திகள மத்தியில்; குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் மத்திய வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளமையால், அந்தப் பரீட்சையில் தோற்றுவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இரண்டு பரீட்சைகளும் ஒரே நாளில் நடைபெறுவதால் பரீட்சாத்திகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X