Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் இராணுவத்தினரும், பொலிஸாரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிங்கள மக்களும் சரி இராணுவத்தினருக்கும் சரி தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விருப்புகின்றனர். யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள். யுத்த காலத்தில் துன்பப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும்.
இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தைரியம் கொடுக்காது அவர்களை வலுவிழக்கச் செய்து இந்த நாட்டின் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இராணுவத்தினர் ஆகிய நாம் எதிர்காலத்தில் அரசியல் நோக்குடன் வாக்குக் கேட்டு இந்த வேலைத் திட்டங்களை செய்யவில்லை. யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .