2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

’ஒற்றுமையை குழப்ப நினைப்​போருக்கு ஆதரவளிக்கக் கூடாது’

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ்

“ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கக் கூடாது” என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளையதினம் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்துரைத்த அவர், அரசு தரப்பிலோ அல்லது பாதுகாப்பு தரப்பிலோ அல்லது அரசின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தும் இந்த ஒற்றுமையை இந்த அரசியல் உரிமையை ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்ட நிற்கின்ற இந்த  நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாதென்றார்.

மக்கள் அதனை செய்பவர்களுக்கு இடமளிக்கக் கூடாதெனவும், அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .