2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒழுக்கசீலர்களாக மாற சாரணியம் கைகொடுக்கும்

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சாரணியத்தின் மூலம் மாணவர்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும்' என வட மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சாரணியம் உருவாக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஜம்போறியின் இறுதி நிகழ்வு வவுனிக்குளத்தில், சனிக்கிழமை  மாலை நடைபெற்றது.

அந்த நிகழ்வில் உரையாற்றும்போது இதனைக் கூறிய அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேர்டன் பவுல் கூட ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து அதன் விளைவாக சாரணியத்தை உருவாக்கி இருக்கின்றார். ஆகவே நீங்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும். ஏனெனில் நீங்களும் சிப்பாய்களே

தற்போதைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படுவது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கள் காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மீது நாங்கள் கொண்டிருந்த பயம் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடம் இல்லை.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க பயப்படுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. எதற்கெடுத்தாலும் பெற்றோர்களும் மாணவர்களும் மனித உரிமை ஆணைகுழுவுக்கு செல்கின்ற நிலையும் மாணவர்கள் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து வணங்கும் ஒரு நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எமது பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் ஆலய சந்நிதானம் இவற்றை தவிர அவர்களை வேறு எங்கும் விழுந்து வணங்கியது கிடையாது. ஆகவே கல்விச்சூழல் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் இருகின்றோம்.

உங்களை கட்டுக்கோப்பாகவும் ஒரு ஒழுக்க சீலர்களாகவும், வளர்த்தெடுப்பதற்கு இந்த சாரணியம் கைகொடுக்கும். சாரணியத்தினுடைய இலட்சியமே தேசப்பற்று கொண்டவர்களாக, நாட்டு பற்று மிக்கவர்களாக அதேநேரம் சமூகத்துக்கு உதவுவர்களாக உருவாக்குவதறகு இந்த சாரணிய இயக்கம் உதவிபுரியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X