Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சணமுகம் தவசீலன்
எமது எதிர்கால சமூதாயத்தினரின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு அறநெறிக்கல்வி மிக அவசியமாகும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற அறநெறி பயில்கின்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு 25ஆம் திகதி மாலை கோவில் மண்டபத்தில் கரைச்சிக்கடியிருப்ப கிராம சேவகர் திருமதி சுமதி சேந்தனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'எதிர்காலத்தில் எமது சந்ததியை வழிநடத்தி செல்லவிருக்கின்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். எமது மாணவர்கள் ஒழுக்கமடையவர்களாக வாழ அறநெறிகளை பயின்று அதன்படி வாழவேண்டியது மிக அவசியமாகும்' என்று அவர் குறிப்பிட்டார்.
'யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் எமது மாணவர்கள் தவறான பாதைகளில் திட்டமிடப்பட்டு திசைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் இதனை கருத்திற்கொண்டு எமது எதிர்கால சந்ததியினரான தமது பிள்ளைகளை கவனமாக வளர்த்தெடுக்க வேண்டும். இதேநேரம் மாணவர்கள் தமது கவனத்தை கல்வியில் மாத்திரமே செலுத்தவேண்டும்.
எமது தமிழினம் சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல்களினூடாக ஒழக்கத்தையும் சிறந்த பண்புகளையும் கட்டிக்காத்துவந்த சமூகமாகும். எனவே எமது மாணவர்கள் சிறந்த ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது கட்டாயமான கடமை எனவும் அன்மைக்காலங்களில் சிறுவர்களுக்கெதிராக நடைபெறும் வன்முறை நிகழ்வுகள் மனதுக்கு வேதனையளிக்கின்ற விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
34 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago