Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஓட்டோக்களுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் எனத் தெரிவித்த யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், அவ்வாறு மீற்றர் பொருத்தாத ஓட்டோ உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும் எனவும் குறிப்பிட்டார்
மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட ஓட்டோ - மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஓட்டோக்களுக்கும் 2019.01.01ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் இந்நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லையென கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட ஓட்டோ - மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட ஓட்டோகளில் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளததகத் தெரிவிதத் அவர், மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு, எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்களெனவும் குறிப்பிட்டார்.
2019.02.01 இலிருந்து கட்டாயமாக மீற்றர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குட்பட்ட ஓட்டோ உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago