2025 ஜூலை 19, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம், தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சியவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

கொடிகாமம் பொலிஸாரால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமை (13) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X