2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கசூரினா கடற்கரை சடலம் அடையாளம் காணப்பட்டது

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காரைநகர், கசூரினா கடற்கரையில் புதன்கிழமை (30) கரையொதுங்கிய சடலம், யாழ்ப்பாணம் பெருமாள் வீதியைச் சேர்ந்த சின்னையா தங்கராஜா (வயது 59) என்பருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிற்றூழியராகக் கடமையாற்றி வந்துள்ளார். கடலில் நீராடிய போதே, இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

5 அடி 4 அங்குலம் உயரமும், பொதுநிறமும், தலைமயிர் கறுப்பு நிறத்திலும் இருந்ததுடன், பச்சை நிறத்தில் ஸ்ரீலங்கா என எழுத்துப் பொறிக்கப்பட்ட காற்சட்டை அணியப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X