Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 24 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரையும் , அவர்களிடம் கஞ்சாவை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் சனிக்கிழமை (23) கைது செய்துள்ளனர் .
கஞ்சா போதை பொருள் வியாபாரம் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து 04 கிலோ கிராம், 400 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் மீட்டுள்ளனர் .
மேலும் , சந்தேக நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே , கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் அவர்களை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்.றொசாந்த்
4 minute ago
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
57 minute ago