2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சா நுகர்தவர்களுக்குத் தண்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காரைநகர் - மானிப்பாய் வீதியில் கஞ்சா நுகர்ந்த இருவருக்கு, தலா 6 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், நேற்று திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.

கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த இவ்விருவரும் அதிகாலை வேளை காரைநகர் செல்வதற்கு பஸ்ஸூக்கு காத்திருந்த போது கஞ்சாவினைப் பீடியில் கலந்து நுகர முற்பட்டுள்ளனர். 

இதன்போது ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

இதேவேளை, ஆவரங்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) கஞ்சா பீடியுடன் கைதான சந்தேகநபர்கள் நால்வருக்கும், தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், நேற்று திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.

அத்துடன், குறித்த நால்வருக்கும் 3 மாத சிறைத்தண்டனை விதித்தார். 

எனினும், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்ட நீதிவான், மேற்படி சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (31) இரவு உடுப்பிட்டி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியினை ஆவரங்கால் பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனையிட்ட போது நால்வரிடமும் இருந்து கஞ்சா கலந்த பீடிகள் நான்கை கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X