2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சா, பணத்துடன் கைதான பெண்ணுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, 9 கிலோகிராம் கஞ்சா மற்றும் 7,602,500 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்ட பெண்ணை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்து, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த 16ஆம் திகதி கோணாவளை வீதி, மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை முற்றுகையிட்ட இளவாலை பொலிஸார், வீட்டின் அறையில் குழிவெட்டி மறைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் பணம் என்பவற்றை கைப்பற்றியிருந்தனர்.

அத்துடன் வீட்டு உரிமையாளரான 24 வயதுடைய யுவதியையும் கைது செய்தனர்.

அதனையடுத்து, 120 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிப்பெற்ற பொலிஸார், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், மல்லாகம் நீதிமன்றில், திங்கட்கிழமை முற்படுத்தியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X