2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் 2.010 கிலோகிராம் கஞ்சாவை கைமாற்றுவதற்காக கடந்த திங்கட்கிழமை (01) அதிகாலை கொண்டு செல்லும் போது கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

பதுக்கி வைத்திருந்த கஞ்சாவைக் கைமாற்றச் செல்லும் வழியில் இவர் பருத்தித்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர், அல்வாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார்.

பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர், நேற்று மாலை இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X