2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்து சனிக்கிழமை (30) உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை (29) மாலை மேற்படி விளையாட்டு மைதானத்துக்கு வந்திருந்த குறித்த இளைஞன் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது அங்கு சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை செய்த போது, உடமையில் இருந்து 8 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியிருந்தனர்.

கைதாகியிருந்தவர் புத்தூர் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில்ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X