2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைதானவர் விளக்கமறியலில்

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்தில் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா பொதியை கொழும்புக்கு கடத்த முயன்ற வியாபாரியை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.

சங்கானை பகுதியில் இருந்து, நேற்று புதன்கிழமை (05) கஞ்சா பொதி ஒன்று கைமாற்றப்பட்டு, பஸ்ஸில் கொழும்புக்கு எடுத்து செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முலவை சந்திப்பகுதியில் பஸ்ஸை மறித்துச் சோதனை செய்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி கஞ்சா பொதியை கொழும்பிலுள்ள தனது நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றதாக குறிப்பிட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X