Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில், புதன்கிழமையன்று (16) 9 கிலோகிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதான யுவதியினை எதிர்வரும் 24ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய அனுமதியினை மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.வசந்தசேனன் வெள்ளிக்கிழமை (17) இளவாலை பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.
120 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணை செய்வதற்குரிய கட்டளையினை இளவாலை பொலிஸார் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவானிடம் கோரியிருந்தனர். இதற்கான அனுமதியினை நீதிவான் வழங்கினார்.
கோணாவளை வீதி, மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை முற்றுகையிட்ட இளவாலைபொலிஸார், வீடு ஒன்றினுள் குழி வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ நிறையுடைய 5 பொதி கஞ்சாவினையும், சமையல் அறையில் வாளி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 76 இலட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டிருந்தனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago