2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சா வியாபாரி கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை, இன்று புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதானவர், குருநகர் பன்சல் வீதியினை சேர்ந்த 37 வயதுடைய நபரென பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்த, 14 வயது சிறுவனொருவனிடம் பணத்தினைக் கொடுத்து கஞ்சா வாங்கி வருமாறு பொலிஸார் அறுவுறுத்தியிருந்தனர்.

சிறுவனுக்கு கஞ்சாவினைக் கொடுக்க முற்பட்ட போது சிவில் உடையில் நின்ற பொலிஸார், அவரைக் கையும் மெய்யுமாக கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X