Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
எங்களுக்கு இறைவனால் கிடைக்கப்பெற்ற மாபெரும் கொடையாக இந்த பேரூந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பேதங்களும் இன்றி நீங்கள் அனைவரும் கைகோர்த்து நிற்பது அற்புதமாக உள்ளது என மன்னார் மறை மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
முருங்கன் பேரூந்து நிலைய திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த கால வரலாறுகள் மிகவும் கசப்பானதாக அமைந்திருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஒன்று ஒற்றுமையை உணர்ந்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்ற எமது முன்னோர் கூறியுள்ளனர். அந்த வகையில் எல்லா சமயங்களும் ஒற்றுமையையும் அன்பையும் பண்பையும் கற்றுக்கொடுக்கின்றன.
அதே போல் நாங்கள் எவ்வித வேற்றுமையும் இன்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தான் இந்த அபிவிருத்திகளை எல்லாம் உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும். நாங்கள் பிளவுப்பட்டு காணப்பட்டால் அநிதியாகவும் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவும் அமைந்து விடும்.
எனவே, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அந்த வகையில், எமது மாவட்டத்துக்கு எவ்வித வேற்றுமைகளும் இன்றி மேற்கொள்ளப்படும். அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் எனது ஆதரவு என்றும் கிடைக்கும்.
அந்த வகையில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சந்தை தொகுதியுடன் காணப்படும் பேரூந்து நிலையம் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை இழகுபடுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நான் உங்களை அழைக்கின்றேன் என்றார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago