Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
வட மாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் திருமதி அனந்தி சசிதரன, தனது கடமைகளை, இன்று (03) பொறுப்பேற்றார்.
யாழ். ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்,தன்னுடை கடமைகளை, இன்று (03) மதியம், உத்தியோகபூர்வமாக அனந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வட மாகாண விவசாய அமைச்சரான பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சரான த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில், புதிய கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரன், மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் ஆகியோர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி பதவியேற்றிருந்தனர். அன்றைய தினமே, தனது கடமைகளை சர்வேஸ்வரன்பொறுப்பேற்றிருந்த நிலையில், தனது கடமைகளை, அனந்தி இன்று பொறுப்பேற்றார்.
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago