Editorial / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
கடற்றொழிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் திங்கட்கிழமை (23) காலைவரை திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர். சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறது.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025