2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடற்படை பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை, யூனியன் கல்லூரிச் சந்தியில் திங்கட்கிழமை (29) மாலை கடற்படையின் பஸ் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாகக் காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம், தபாற்கந்தோர் பகுதியைச் சேர்ந்த வள்ளியன் சற்குணராஜா (வயது 60) என்பவரே உயிரிழந்தார்.

துவிச்சக்கரவண்டியில் வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை, யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற கடற்படை பஸ் மோதியது. படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X