2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையினருக்கு எதிரான வழக்கு 15 வரை ஒத்திவைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடற்படை டோறா ஒன்று மோதியதில், மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமமார் ஒத்திவைத்தார்.

யாழ். எழுவைதீவு கடற்பரப்பில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அவரை கொலைச் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி, 8 கடற்படையனர் மீதும், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எழுவைதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரனி யேசுதாஸ் (வயது 60) என்ற 4 பிள்ளைகளின் தந்தையை இதன் போது உயிரிழந்தவராவார்.

மேற்படி வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 கடற்படையினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட சான்றுப் பொருளின் பகுப்பாய்வு அறிக்கையானது, இன்னும்  கிடைக்கப்பெறாததையடுத்தே நீதவான், இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

எமக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடு வேண்டும், எமது தந்தையின் படகை மோதி, அவருடைய உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த கடற்படையினர், தங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, உயிரிழந்தவர்களின் 4 மகள்களும் தெரிவித்தனர்.

மேலும், எமது தந்தையின் உயிரிழப்புக்காக, 1 இலட்சம் ரூபாய் பணம், இயந்திரத்துடன் கூடிய படகும் தருவதாக கடற்படையினர் எங்களிடம் கூறினர். பெண் பிள்ளைகளான நாங்கள் இயந்திரத்துடன் கூடிய படகை வைத்து என்ன செய்வது. அத்துடன், தருவதாகச் கூரிய நட்டஈடும் போதாது. 1 மில்லியன் ரூபாய் பெற்றுத்தர நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .