2025 மே 07, புதன்கிழமை

கடலட்டை விவகாரம்: ’டக்ளஸ் மௌனம் காப்பது ஏன்?’

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

'சீன நாட்டவரின் நடவடிக்கையைப் பார்த்தால், எங்கள் வீட்டு வாசலிலும் வந்து நிற்பார்கள் போல் தெரிகிறது' என்று, அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள்.ஜெயந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், வடமாகாணத்தில், சீனர்களின் கடலட்டை வளர்ப்பு தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன் எனவும், அவர் வினவினார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (29) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரியாலையில், கடலட்டை குஞ்சை வளர்த்து, அதை பூநகரி கடலில் வளர்ப்பதற்காக கொண்டுபோய் விடுகிறார்கள் என்றும் வெளிநாட்டவர் தமது கடலில் கடலட்டையை வளர்த்து, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி இருக்கிறது என்றால், தமது மக்களுக்கு ஏன் அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் வினவினார்.

இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை விடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனாவின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டும் காணாமல், மௌனம் காப்பது ஏன் என்று வினவிய அவர், ஆளுமையுடைய தமிழ்த் தலைவனாக இருந்தால், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X