2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடலட்டை பிடிக்க விண்ணப்பிக்க முடியும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடலட்டை பிடியில் ஈடுபட விரும்பும் மீனவர்கள் விண்ணப்பங்களை யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும்போது, தவறுதலாக மீனவர்களின் வலைகளில் கடலட்டைகளும் சேர்ந்து வருகின்றன. இவற்றை படகினுள் சேர்த்து வைத்திருக்கும்போது, சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடியில் ஈடுபட்டதாகக்கூறி கைதுசெய்யும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கடலட்டை பிடியில் ஈடுபட விரும்பம் உள்ளவர்கள் திணைக்களத்தின் ஊடாக விண்ணப்பம் செய்து உரிய அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X